நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ விபத்து….!

நுவரெலியா நகரில், லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (15) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உணவகத்தில் சமையல் அறையில் காணப்பட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles