நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன

நுவரெலியா நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா  நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன  போக்குவரத்து பொலிஸாரால் இன்று  (20) கடுமையாக பரிசோதிக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்காக  இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பாடசாலை அதிபர்களின் அனுமதியுடன் நுவரெலியா பொலிஸ் மோப்பநாய் பிரிவின் ஹொலியுடன் துணையுடன் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போதைப்பொருள் பாவனையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸார் மாணவர்களுக்கு தெளிவூட்டியதுடன், பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் அறியக் கிடைத்தால் அதிபருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles