நுவரெலியா காயத்ரி ஆலயத்தின் ஸ்தாபகரும், பக்தர்களால் போற்றப்படும் காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 19ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் நாளை 24ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா இலங்காதீஸ்வர ஆலய பீடத்தில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளன.
அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் விசேட அலங்கார அபிஷேகம், மகா யாகம் மற்றும் பஜனை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், குருபீடத்தில் விசேட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
சுவாமிகளின் அருளாசியை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதுடன், அனைத்து வழிபாடுகளும் நிறைவடைந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
ஆன்மிகமும் பக்தியும் நிறைந்த இந்நன்னாளில் சுவாமிகளின் அடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்று, காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் அருளாசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையின் தலைவர் எஸ். மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
