நுவரெலியாவில் குளிரூட்டப்பட்ட மரக்கறி வகைகளை பொதிசெய்யும் பணி ஆரம்பம்

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, கெரட் , பீட்ரூட், கோவா, லீக்ஸ் உட்பட மரக்கறி வகைகளை பொதி செய்து சந்தையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாகாஸ்தோட்ட விவசாய கூட்டுறவு சங்கம் மேற் கொண்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் எம். பீ.ஆர். புஸ்பகுமார மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கொரியா நாட்டு ‘கொய்க்கா’ சர்வதேச நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூ. என். ஹெபிடாட் நிறுவனம் சுமார் 40 இலட்சம் ரூபா பெருமதியான நவீன இயந்திரங்களை பெற்றுகொடுத்துள்ளது.

இத்திட்டமானது உத்தியோகபூர்வமாக இன்று (10) புதன் கிழமை மரக்கறிகளை பொதி செய்யும் பணியை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி வகைகளை சுத்தமான நீரில் கழுவி உலரவைக்கப்பட்டு குளிரூட்டபட்டு பொதி செய்து பொது சந்தையில் விற்பனை செய்வதற்கான. ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப வைபவத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி கனா சிங்கர் கம்டி , கொரியாநாட்டு கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திருமதி யுவான் குவா கேள், யூ என் ஹெபிடாட் நிறுவனத்தின் இலங்கை மாலைத்தீவீற்கான நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கலாநிதி ஜானக்க கல்ப்ஹெவா, நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன, பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி யூ என் ஹெபிடாட் பிரதி திட்ட முகாமையாளர் எஸ். எல். அன்வர்கான்இ இந்நிறுவனத்தின் திட்டமதிப்பீட்டு உத்தியோகத்தர் ஏ. வாசகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles