நுவரெலியா டெஸ்போர்ட் தோட்ட வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

நுவரெலியா மாவட்டம் டெஸ்போர்ட் தோட்டப் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் உப தலைவர் பிரதீப் , டெஸ்போர்ட் தோட்டத் தலைவர்கள், பொது மக்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், டெஸ்போர்ட் தோட்டத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அடிக்கல் இன்று உத்தியோகபூர்வமாக நாட்டப்பட்டு, வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கிய போக்குவரத்து சிரமங்களுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Latest Articles