நுவரெலியா, பதுளையில் இ.தொ.கா. முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோட்ட நிர்வாகங்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் வீதியில் இறங்க வேண்டி ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விரு மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது என்று இதொகாவின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதொகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஹொரண பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டோம். இவ் தொழிற் சங்க நடவடிக்கை மாபெரும் வெற்றியை வழங்கியதுடன், மக்களிடத்தில் பெரும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இ.தொ.காவின் ஊழியர்களுக்கும், மாற்று தொழிற்சங் ஒத்துழைப்பு வழங்கியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமையால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தவுடன், தேயிலை நிறையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கும் தீர்வு காண பட்டதுடன்
மழைகாலத்திற்கு வேறாகவும் வெயில் காலத்திற்கு வேறாகவும் நிறை மாற்றப்பட்டு ள்ளது.

அத்துடன் 15 வருட காலமாக பெருந் தோட்டத்தில் சேவை புரிந்த சிவக்குமார், மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் அனுமதிமதித்த சந்தர்ப்பத்தில் இறந்து விட்டார். இச் சந்தர்ப்பத்தில் பெருந் தோட்ட அதிகாரிகள் இவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட ரீதியாக பேச்சு வார்த்தை நடாத்தி குறைந்த அளவு பணத்தை வழங்க ஏற்பாடு செய்தனர்.

நாங்கள் தற்பொழுது எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக் குடும்பத்தினருக்கு ரூ 50 இலட்சமும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட காணியும் மேலும் அவர் மனைவிக்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். அத்துடன் செந்தில் தொண்டமான் தலைமையில் பதுளை அக்கரபரத்தின பெருந் தோட்டத்திலும் வெற்றியை கொண்டுள்ளதுடன்,மஸ்கெலியா பகுதியிலும், தவிசாளர்.ராமேஸ்வரன் அவர்களது.பகுதியான நுவரெலியாவிலும் வெற்றியை கண்டது அனைத்து பெருந்தோட்ட யாக்கங்களுக்கும் ஒரு பாடத்தை புகர்த்தி இருக்கும் என்பதுடன், எதிர்காலங்களில் இவ்வாறான தவறுகளை செய்யாது இருப்பார் கள்.” – எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles