நெருக்கடியின் பின்னணி மற்றும் மீட்சியில் IMF இன் பங்கு

 அரச நிதித் துறையில் உள்ள கட்டமைப்பு ரீதியான பலவீனங்களே இலங்கையில் நீண்ட கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.தொடர்ச்சியான வரிவருமான வீழ்ச்சி (நெருக்கடிக்கு முந்தைய இலங்கையானது உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு அமைய மிகக் குறைந்த வரி வருமானம் பெறும் நாடாகும்) மற்றும் மீண்டுவரும் செலவினங்கள் பல தசாப்தங்களாக அதிக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு வழிவகுத்ததோடு இதன் விளைவாக கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் அரச கடன் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 90% வரை உயர்ந்துள்ளது.

 2019 இன் பிற்பகுதியில் பொருத்தமற்ற சமயத்தில் வரிக் கொள்கை குறைப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் என்பன 2020/2021 இல் இரண்டு இலக்க வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக இலங்கையின் கடன் தரப்படுத்தல் முன்பிருந்த அளவுகளுக்கு அண்மித்த நிலைக்கு வீழ்ச்சி அடைய காரணமானது. இதன் காரணமாக, உலக மூலதனச் சந்தைக்கான பிரவேசத்தை நாடு இழந்தது. மூலதனச் சந்தை பிரவேசத்தை இழந்த போதிலும், இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தலை தொடர்ந்து மேற்கொண்டது. அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பு விரைவாகக் குறைய காரணமானது.

 அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவால் ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.கடன் மறுசீரமைப்பு மேற்கொண்டு முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைத் தொடங்கும் வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகளுக்கு ஒருதலைப்பட்ச நிறுத்தலை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 IMF ஆதரவு வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஊடாக 4 வருட காலத்தில் 2.9 பில்லியன் டொலர்கள் வழங்கும். இருப்பினும், IMF திட்டத்தின் நன்மதிப்பு அது வழங்கும் நிதியை விட மிக அதிகமாக இருக்கும். IMF திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள நம்பகத்தன்மை, அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் பொதுவாக உலகளாவிய சந்தையிலிருந்து ஏனைய நிதி ஆதாரங்களைக் கொண்டுவர உதவியாக அமையும்.

 இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பைக் கட்டியெழுப்பவும், பொருளாதாரத்திற்கு வெளி மற்றும் உள்ளக அவசர நிலைகளுக்கு உள்ளாவதை குறைக்கவும் இத்தகைய நிதியுதவி அவசியம். வரவு செலவுத்திட்டத்தின் வெளிப்புற நிதியை மீட்டெடுப்பதன் ஊடாக பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும் மத்திய வங்கியின் நிதி நிதியியலின் தேவையையும் குறைக்கும்.

 ஏனைய நிதியுதவி நிறுவனங்களைப் போலவே, IMF இன் கடன் விதிகள், அது நிலைக்க முடியாததாகக் கருதப்படும் ஒரு நிறுவனத்திற்கு கடன் வழங்க அனுமதிக்காது. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் வேலைத்திட்டமொன்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் இணைந்ததாக இலங்கையும் தனது கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

 கடன் மறுசீரமைக்கும் உலகளாவிய நிதிச் சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கும் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் இலங்கையின் கடன் தரப்படுத்தலை மேலும் நிலையான நிலைக்கு மீளமைப்பது மற்றொரு முக்கிய அம்சமாகும்.

 கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில், IMF இனால் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை (DSA) மேற்கொள்ளப்படுவதோடு இது எஞ்சியுள்ள கடனின் நிலைத்தன்மையை சீராக்க தேவையான கடன் குறைப்பின் அளவைக் கண்டறியும். இந்த கடன் குறைப்பு என்பது இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான கடனை குறைக்க அல்லது நீட்டிக்கவும் மற்றும் அரச வருவாயை அதிகரித்து தனது செலவை தொலைநோக்குடன் முகாமைத்துவம் செய்வதன் ஊடாக எதிர்கால வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை குறைக்கவும். அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் கலவையாகும்.

 கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதிய சபை அங்கீகாரம் கிடைத்ததும், கடன் மறுசீரமைப்பு முறைகள் குறித்து கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்தை ஆரம்பமாகும். நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையும் தொடர் செயற்பாடும் வலுவாகவும் தடையின்றியும் இருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்.

அரசின் வருவாய் அதிகரிப்பு

 அரச நிதிய பலவீனமே நெருக்கடிக்கு மூலகாரணமாக இருப்பதால், நிதிச் சீர்திருத்தங்கள் முழு மீட்சியின் முக்கிய அங்கமாகும். 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% முதன்மை வரவு செலவுத்திட்ட மேலதிகத்தை (அரசு வருவாய் – வட்டி செலவுகள் தவிர்த்து அரச செலவு) அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

 அரச நிதி ஒருங்கிணைப்பு முதன்மையாக வருவாய் அடிப்படையாகக் கொண்டது. 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% இலங்கையின் மொத்த அரசாங்க வருமானம் (நன்கொடைகள் உட்பட) உலகிலேயே மிகக் குறைவான அளவாக மாறியது.. இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்குள் அரசாங்க வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குறிப்பாக முற்போக்கான வரி நடவடிக்கைகளின் மூலம் அரசாங்க வருவாயில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். நிறுவன ரீதியான மற்றும் தனிநபர் வருமான வரிகள் மற்றும் செல்வ வரிகள் போன்ற வரிகள் மிகவும் முற்போக்கானவை என்பதோடு வருமானம் அதிகமாக இருப்பதால் வரிச்சுமை அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது.

அதற்கமைய தனிநபர் வருமான வரி கீழ் வரும் வகையில் மாற்றப்பட்டது.

வருடாந்த வருமானம்(ரூ) வரி விகித எல்லை

1,200,000 க்கு குறைவு 0%

1,200,000 முதல் 1,700,000 6%

1,700,000 முதல் 2,200,000 12%

2,200,000 முதல் 2,700,000 18%

2,700,000 முதல் 3,200,000 24%

3,200,000 முதல் 3,700,000 30%

3,700,000 இற்கு மேல் 36%

 வட்டி வருமானம், வேலைவாய்ப்பு வருமானம் உள்ளிட்ட கொடுப்பனவுகளின் மீதான கட்டாய தடுத்து வைப்பு வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இலாபத்தின் மீதான இறுதி இலாபம் மீதான இறுதி தடுத்துவைப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வரி வசூல் மற்றும் வரி செலுத்துவோரின் அடையாளத்தை மேம்படுத்தும்.

 துறைசார் விடுவிப்பற்ற உரிய நிறுவன வருமான வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டது. இந்த வரியானது லாபத்திற்கு மட்டுமே பொருந்தும், எனவே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இந்த கடினமான காலங்களில் கூடுதல் சுமையை சந்திக்காது.

 VAT விகிதங்கள் 8% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டதோடு VAT பதிவு வரம்பு ரூ.300 மில்லியனில் இருந்து ரூ.80 மில்லியனாக குறைக்கப்பட்டது.

 ஆரம்ப கட்டமாக 2023 ஜனவரியில் மது மற்றும் புகையிலை மீதான உற்ப்தி வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரியில் எரிபொருள் மீதான எரிபொருள் வரியும் அதிகரிக்கப்பட்டது. ஜனவரி 2024 முதல் பணவீக்கத்திற்கு அட்டவணைப்படுத்தப்பட்டது.

 , VAT க்கு ஏற்கனவே உள்ள விடுவிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். VAT வரி மீள செலுத்துதலை விரைவுபடுத்தவும் பின்னர் SVAT முறையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 2025 ஆம் ஆண்டில், சொத்து வரி சீர்திருத்தம் செய்யும் வகையில் செல்வ வரி அறிமுகப்படுத்தப்படும். பரிசு/பரம்பரை வரி வடிவில் உரிய வரியில்லா கொடுப்பனவு மற்றும் குறைந்தபட்ச விலக்குகளுடன் செல்வ வரி அறிமுகப்படுத்தப்படும்.

 வேலைவாய்ப்பு வருமானம், வட்டி வருமானம் மற்றும் சேவைக் கொடுப்பனவுகள் மீதான கட்டாய தடுத்து வைப்பு வரி மூலம் வரி நிர்வாகம் மேலும் வலுப்படுத்தப்படும்.

 சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியின் மூலம் பாரியளவில் வரி செலுத்துவோர் பிரிவின் கொள்ளள வு மேம்படுத்தப்படும்.

 விரிவாக்கப்பட்ட VAT வரி இலத்திரனியல் சமர்ப்பிப்பு, வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்மை (RAMIS) முழுமையாக செயல்படுத்துதல் உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கல்.
நடவடிக்கைகள் மற்றும் ஏனையவை வேகமாக கண்காணிக்கப்படும்.

 BOI மற்றும் SDP சட்டங்கள் மூலம் செயற்படுத்தப்பட்ட அனைத்து வரிச் செலவுகளும் (வரிச் சலுகை அல்லது வரி விடுமுறை காரணமாக வரி இழப்பு) ஆவணப்படுத்தப்பட்டும்.

செலவு முகாமைத்துவம்

 அரச நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முதன்மை மையமாக வருவாயை மேம்படுத்தும் அதே வேளையில், செலவு முகாமைத்துவமும் முக்கியமானது. இலங்கையில் அரச செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 20% ஆகும்.

 ஊதியம் மற்றும் ஓய்வூதியக் குறைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் அரசாங்க ஊதிய மசோதா மற்றும் ஓய்வூதிய செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகள் உருவாக்கப்படும். இது முதன்மை வரவுசெலவுத்திட்ட கையிருப்பு இலக்குகளுக்குள் பணவீக்கத்தை ஓரளவு கணக்கிடுவதற்கு சில அளவிலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

 2023 செப்டெம்பர் மாதத்துக்குள் அனைத்து செலவினப் பிரிவுகளுக்கும் ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பை (ITMIS) விரிவுபடுத்துவதன் மூலம் செலவினங்களின் மீதான அர்ப்பணிப்புக் கட்டுப்பாடு பலப்படுத்தப்படும். மின் கொள்முதல் முறையும் விரிவுபடுத்தப்படும்.

 அரச முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான செலவுகள் பாதுகாக்கப்பட்டு முடிந்தவரை மேம்படுத்தப்படும்.

சமூக பாதுகாப்பு வலையமைப்பு

 இத்திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் காணப்பட்ட சமூக பாதுகாப்பு வலையமைப்புகளுக்கான செலவுத் தளத்தை உள்ளடக்கப்படும். 2023 ஆம் ஆண்டிற்கான இந்த செலவுகளின் அளவு ரூ.187 பில்லியன் ஆகும், இது சமுர்த்தி, அங்கவீனர்கள், முதியோர் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயாளர்கள் (CKDU) தொடர்பான தற்போதைய பண பரிமாற்ற திட்டங்களுக்கு பொருந்தும்.

 நலன்புரிப் பயனாளிகளுக்கான தெரிவு அளவுகோல்கள் அரசியலற்றதாக்கப்படுவதையும், விடயதான அளவுகோல்களின் அடிப்படையில் இருப்பதை உறுதிசெய்ய, நலன்புரி விநியோக முறை குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்திற்கு உட்படும். பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், புதிய திட்டம் ஜூன் 2023க்குள் செயல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய தெரிவு அளவுகோலின் கீழ் தகுதி பெறாத பயனாளிகளுக்கு ஜனவரி 2024 முதல் நலன்புரித் தொகை வழங்கப்பட மாட்டாது. அத்தகைய தகுதியற்ற நபர்களுக்கு சமுர்த்தி வாழ்வாதார உதவி போன்ற பணமில்லாத வழிகளில் உதவுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
SOE விலை நிர்ணயம்
 எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் தவறான விலை நிர்ணயம் காரணமாக முக்கிய அரச நிறுவனங்களில் (SOEs), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் பெரும் நட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த நட்டத்தை ஈடுசெய்ய வரி செலுத்துவோர் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகளால் நிதி வழங்கப்படுகின்றன. அவை இப்போது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் மூலம் எழும் அபாயங்களை எதிர்கொள்கின்றன. பொதுவாக இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவில் 20% மான எரிபொருளுக்கு நிலவுகின்ற கேள்வியைக் கட்டுப்படுத்த தவறியதால், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தவறாக விலை நிர்ணயம் செய்வது கொடுப்பனவு சமநிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விலைகள் அரசியல் மயமாக்கப்படுவது நிறுத்தப்படும். 2018 இன் விலை சூத்திரத்தின் மூலம் விலைகள் தீர்மானிக்கப்படுவதுடன் செலவுகளை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு ஒருமுறை தயாரிக்கப்படும்.

 எதிர்கால செலவுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு 06 மாதங்களுக்கும் ஒருமுறை விலை மாற்றங்களுடன் செலவினங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சார விலைகள் தயாரிக்கப்படும். 2022 ஆகஸ்ட் (75% அதிகரிப்பு) மற்றும் பெப்ரவரி 2023 (66% அதிகரிப்பு) ஆகிய இரண்டு விலை பொருத்தப்பாடுகள், தேவையான ஜனவரி பொருத்தப்பாட்டுடன் 2023 பெப்ரவரி மாதத்தின் தயாரிப்பு தாமதித்ததனால் ஓரளவு பற்றாக்குறை நிலை ஏற்பட்டது. முன்னோக்கிச் செல்லும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் விலைகள் மாற்றியமைக்கப்படும்.
 2023 டிசம்பர் மாதத்துக்குள், மின்சாரச் செலவை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாக மாறும் வகையில் மொத்த விநியோகப் பரிவர்த்தனை கணக்கியல் முறை மேம்படுத்தப்படும்.
 IMF வேலைத்திட்டத்திற்கு இடையில், எரிபொருள் மற்றும் மின்சார த்திற்கான செலவுகள் மற்றும் சில்லறை விலை ஆகியவற்றுக்கு இடையே சில வேறுபாடுகள், இல்லையெனில் CPC மற்றும் CEB க்கு தொடர்ந்து நட்டம் ஏற்படுமாயின் , அத்தகைய நட்டங்கள் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கு வரவு செலவுத்திட்ட பரிமாற்றங்கள் மூலம் நட்ட ஈடு வழங்கப்படும்.

 பெரும் நட்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் இருப்புநிலைகள் மறுசீரமைக்கப்படும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் இருப்புநிலையில் இறையாண்மை அந்நியச் செலாவணி கடன்கள் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கப்பட்டன.

 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் புதிய கடன்கள் கடுமையான விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்புநிலைக் குறிப்பின் ஆரோக்கியம் மற்றும் நிதி அடிப்படையில் வெளிநாட்டு நாணயக் கடன் பெறுதல் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட சட்டவிதிகள் இதில் அடங்கும்.

கடன் முகாமைத்துவம்

 உலகளாவிய சிறந்த நடைமுறைகளின்படி ஒரு சுதந்திரமான அரச கடன் முகாமைத்துவ நிறுவனம் ஒன்று நிறுவப்படும்.
 இந்த நிறுவனத்துக்கு கடன் முகாமைத்துவம் தொடர்பான அனைத்து பொறுப்பும் வழங்கப்படுவதோடு, சுயமான நிர்வாக கட்டமைப்புடன் நிதி அமைச்சுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

விலை நிலைத்தன்மை மற்றும் நிதிக் கொள்கை

 2022 இல் பணவீக்கம் 70%ஐ நெருங்கும் நிலையில் விலை ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஏப்ரல் 2022 (700 அடிப்படைப் புள்ளிகள்), ஜூலை 2022 (100 அடிப்படைப் புள்ளிகள்) மற்றும் 2023 இல் (100 அடிப்படைப் புள்ளிகள்) பணவீக்கத்தை 4-6% என்ற இலக்கு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் கொள்கை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. பணவீக்கம் உச்சத்தில் இருந்து கணிசமான அளவு குறைந்துள்ளதுடன், மேலும் 2023 இன் இரண்டாம் பகுதியில் ஒற்றை இலக்க நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 வேலைத்திட்ட காலத்தில் நிதி முகாமைத்துவம் (வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு மத்திய வங்கியின் நேரடி நிதியியல்) படிப்படியாக நீக்கப்படும். இதற்காக திறைசேரிக்கு அதன் கடன் தேவைகளை கணிசமாகக் குறைக்கவும், பற்றாக்குறையை ஈடுகட்ட சந்தை நிதிமுகாமையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
 சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் ஏனைய தரப்புகளிடமிருந்து வெளிநாட்டு நிதியுதவிக்கான வழியைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பண நிதியியலை அகற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்கும். இருப்பினும், வெளிநாட்டு நிதியளிப்பில் குறைபாடுகள் இருந்தால், நிதியளிப்பைக் குறைக்க இலக்கு கள் தயாரிக்கப்படும்.

 ஒரு புதிய மத்திய வங்கிச் சட்டம் மூலம் நிதி நிதியயலை நீக்குவதற்கு அவசியமான பொருளாதாரத்தை சட்டப்பூர்வ அதிகாரத் தைப் பெற்றுக் கொடுக்கும். புதிய அரசியலமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட மத்திய வங்கி சுதந்திரம் மற்றும் பணவீக்கத்தை இலக்குமயப்படுத்துவதற்கு சட்டக் கட்ட மைப்பையும் வழங்கும். மத்திய வங்கியின் சுதந்திரம் மற்றும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் தேவைக்கும் இடையில் பொருத்தமான சமநிலைக்கும் சட்டம் இயற்றப்படும்.

 தற்போதுள்ள அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் படிப்படியாக அகற்றப்பட்டு, அந்நியச் செலாவணி சந்தையும், சந்தை அடிப்படையில் செயல்பட வழியேற்படும். அந்நிய செலாவணி சந்தை பணப்புழக்கத்தின் விளைவாக, மத்திய வங்கி ஏற்கனவே சந்தை வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டாய சரணடைதல் தேவைகளை நீக்கியுள்ளது.

 இலங்கைப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவுவதனால், அந்நிய செலாவணி வரவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், திட்டத்தின் குறிப்பிட்ட இலக்குகளுடன் அந்நிய செலாவணிக் கையிருப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்யவும் எதிர்பார்க்கிறது.

நிதித் துறையின் ஸ்திரத்தன்மை
 மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் இறையாண்மை கடன் மறுசீரமைப்பு ஆகியவை வங்கி மற்றும் நிதிக் கட்டமைப்பு மீதான அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இந்த சூழலில், கடினமான காலகட்டத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நிதிக் கட்டமைப்பில் போதுமான மூலதனமாக்கல் மற்றும் பணப்புழக்கத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது.

 தற்போதுள்ள அபாயங்களை மதிப்பிடுவதற்கு தற்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோன்று, கட்டமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளின் சொத்துத் தரம் மற்றும் இத்தகைய அபாயங்களை செயற்திறனுடன் குறைப்பதற்கு இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல்.

 இந்த சவாலான காலகட்டத்தில் உயர்ந்த கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளது. அத்தகைய தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கு வங்கிச் சட்டம் திருத்தப்பட்டும். மத்திய வங்கியின் தீர்மான அதிகாரம், வைப்புத் தொகை காப்புறுதி கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளை மேம்படுத்த வங்கிச் சட்டத்தில் மிக முக்கியமான திருத்தங்கள் பின்னர் அறிமுகப்படுத்தப்படும்.

 ஒழுங்குமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக முறைகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கு, குறிப்பாக அரச வங்கிகளுக்கு அவசியம் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பான அபாய முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக அரச வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

நிர்வாகம்

 இலங்கை பொருளாதாரம் குறித்து நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த வேலைத் திட்டம் உதவுவனுடன் உள்நாட்டு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐ.எம்.எப். இனால் நிர்வாக சமிஞ்சை குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்கப்படும். ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை நிர்வாகத்தின், நிறுவனக் கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை இதன் மூலம் அடையாளம் காணப்படும்.

 ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணையாக, ஊழலுக்கு எதிரான சட்டங்கள் தயாரிக்கப்படும். இதன்மூலம் சொத்து அறிக்கையிடல் மற்றும் விசாரணைகளின் சுயாதீனத்தன்மை பலப்படுத்தப்படும்.

 சொத்து மீட்பு விதிகளும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் சட்டமியற்றும் கட்டமைப்பில் சேர்க்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 வலுவான நிதி விதிகளை உள்ளடக்கிய புதிய பொது நிதி மேலாண்மை சட்டம் உருவாக்கப்படுகிறது.

 இறுக்கமான நிதி மேலாண்மை மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நடுத்தர கால நிதி கட்டமைப்பு உட்பட, நிதி முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 அனைத்து நிதி தரவுகளின் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படும். இலங்கையின் பொதுக்கடன் பற்றிய விரிவான தரவுகள் அடங்கிய காலாண்டு கடன் அறிக்கையை அரசாங்கம் வெளியிடப்படும்.

 BOI வரிச் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் / சலுகைக் காலம் வரிச் சலுகை உரிமங்களைப் பெறும் நபர்கள் அறிவிக்கப்படுவார்கள். குறிப்பிடத்தக்க பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும்.

 SOE ஐ மேம்படுத்தப்படுவதுடன் KPI கள்) மூலம் அறிவிக்கப்படும் நிர்வாகத்தின் கருத்துக்கள் தொடர்பான அறிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 SOE குழு உறுப்பினர்களுக்கான தேர்வு செயல்முறை தரம் மற்றும் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக 52 முக்கிய SOEகளின் வருடாந்த அறிக்கைகள் துரிதமாக வெளியிடப்படுகின்றன.

வளர்ச்சியை மேம்படுத்தும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு

 ஸ்திரத்தன்மைக்கு உடனடி முன்னுரிமை என்றாலும், IMF திட்டமானது நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை உயர்த்துவதற்கான சீர்திருத்தங்களையும் உள்ளடக்கும். வர்த்தக சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இதில் அடங்கும். (கட்டணங்களுக்கான போட்டியை படிப்படியாக நீக்குதல்) பெண் தொழிலாளர் பங்களிப்பு மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஆற்றல் துறை சீர்திருத்தங்கள் உற்பத்தி செலவுகளை குறைக்க மற்றும் திறமையின்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தல்.

முடிவுரைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி

 IMF- EFF திட்டத்தின் கீழ், பிரசத்தமற்ற ஆனால் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், ந்த மநுசீரமைப்புக்கள் இன்றியமையாதது என்ற போதிலும் இவற்றை பாதகமான சமூக மற்றும் நிலையில்லா கொள்கைகள் மீண்டும் உருவாக்கப்படுவதைத் தடுப்பதன் மூலம் நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்தல்.

 2022 இடைக்கால பட்ஜெட் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் EFF திட்டத்தின் கீழ் கொள்கை செயற்பாடுகளை வலுப்படுத்தும்.

 மேலும், IMF-EFF திட்டத்திற்கு அப்பால் சென்ற, பலதரப்பு குறித்து விரிவான,பரந்துபட்ட மறுசீரமைப்புக்கள், நிலையான மீட்சிக்கும், வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும் பொருளாதாரத்தைத் திறக்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் அரசாங்கத்தினால் நடுத்தர முதல் நீண்ட கால பாதையை துரிதமாக கொண்டுவருதல்.

 எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கான இந்த தொடர்ச்சியான முயற்சியில் அனைத்து பங்குதாரர்களின் ஆதரவும் பங்களிப்பும் இன்றியமையாததாக இருக்கும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
21.03.2023

Related Articles

Latest Articles