நேட்டோவையும் வம்புக்கு இழுக்கிறார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு கூட்டு முயற்சி தேவை. இதில் நேட்டோ நட்பு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இணைய வேண்டும்.

ஹார்முஸ் நீரிணை மூலம் பயனடையும் நாடுகள், அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவ வேண்டும். இதற்கு எவ்விதப் பதிலும் இல்லாமலோ அல்லது எதிர்மறையான பதில் வந்தாலோ, அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நம்மிடம் நேட்டோ என்ற ஓர் அமைப்பு உள்ளது. நாங்கள் அவர்களிடத்தில் மிகவும் கனிவாகவே நடந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் அவர்களுக்கு உதவினோம்.

இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்பதைப் பார்ப்போம். ஏனெனில், ‘நாங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்போம்; ஆனால் அவர்கள் நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள்’ என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன்.

அவர்கள் நமக்குத் துணையாக இருப்பார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்காவைப் போலன்றி, ஐரோப்பாவும், சீனாவும் வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து வரும் எண்ணெயையே பெருமளவில் சார்ந்திருக்கிறது” என்றார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் சீனா உதவத் தவறினால், இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தான் திட்டமிட்டுள்ள சந்திப்பு ஒத்திவைக்கப்படக்கூடும் என்றும் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

நேட்டோ என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகளை உள்ளடக்கிய ஒரு ராணுவக் கூட்டணியாகும்.

இது கூட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது, இந்த அமைப்பில் உள்ள ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles