மாத்தறை ஹிஹகொட பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்து மக்களிடம் வஞ்சகமாக பணம் சேகரித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலாங்கொடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடுவான, மாத்தறை, பெலிஅத்த மற்றும் திஹகொட பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் தலைமையில் நான்கு பேரும் முச்சக்கர வண்டியில் பலாங்கொடை நகரத்தில் பணம் சேகரிக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கும் பணத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தும் நபருக்கு ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாவும், பெண்கள் இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாக இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
எம்.எப்.எம். அலி