தேயிலை உற்பத்தியைப் பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி, சட்ட விரோதமான முறையில் மாணிக்ககற்கள் அகழும் இரகசிய நடவடிக்கை பாரிய அளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம் பெற்று வருகிறது எனத் தெரிவித்து, அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் –
பெண் தொழிலாளர்கள் பணிக்குச்சென்று கொழுந்து பறிக்கும் சமயத் தில் அகழ்ந்து உள்ள அந்தக் குழிக ளில் தவறுதலாக விழும் பட்சத்தில் பாரிய காயங்கள் ஏற்படும் அபாயமும் மரணிக்கும் அபாயமும் உள்ளது.

சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்கள் அகழ்ந்து உள்ள குழிகளை மூடாமல் சென்று விடுவதே இதற்குக் காரணம். – என்று கூறுகின்றனர்.
உடன் கவனம் செலுத்தி அந்தக் குழிகளை மூட தோட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் எனவும், சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்து சட்டத் தின் முன் நிறுத்த வேண்டும் எனவும்கோரிக்கை விடுக்கின்றனர் அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்.










