‘நோர்வூட் எல்லைக்குள் வெளி வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்’

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு, நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு வெளி வியாபாரிகள் வருவதற்கு தடைவிதிக்கப்படவேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , வியாபார நடவடிக்கைகளுக்காக வெளி பிரதேசங்களில் இருந்த நோர்வூட்வரும் வியாபாரிகளுக்கு தற்காலிக தடைவிதிக்கப்படவேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதியாகிய எமக்கு இருக்கின்றது.

சபையிலும் இந்த கோரிக்கையை விடுத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வர்த்தக செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே முன்னெடுக்கப்படவேண்டும் எனக்குறிப்பிட்டனர்.” – என்றார் சிவநேசன்.

Paid Ad