பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – காலாவதியான பல பொருட்கள் மீட்பு (படங்கள்)

பசறை நகரிலுள்ள வெதுப்பகங்கள், தேநீர் கடைகள், பல சரக்கு கடைகள் ஆகியனவற்றை பசறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினர்கள் இணைந்து நேற்று சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்களை கைப்பற்றி அந்தந்த கடைகளிலேயே மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டதோடு, காலாவதியான லேபல்கள் ஒட்டப்படாத பொருட்களும் சுகாதார பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.

கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எம். செல்வராஜா, ராமு தனராஜ்

Related Articles

Latest Articles