பசறை பகுதியில் கசிப்புடன் பெண் உட்பட மூவர் கைது

பசறை பொலிஸ் பிரிவில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத மதுபானமான கசிப்பு 10,000 மில்லிலீற்றர் மற்றும் கோடா 282,500 மில்லிலீற்றருடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பெண் 56 வயதுடையவர் எனவும், அவர் மீதும்பிட்டிய குடுகல்பத்தன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 97,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்

மேலும், கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் 20 வயதுடையவர்கள் எனவும், இரு சந்தேக நபர்களும் பசறை, எல்டப் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 10,000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் 185,000 மில்லிலீற்றர் கோடா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு, சுருள் மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (2) அஜித் பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னசிறி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணும் இரு சந்தேக நபர்களும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles