நண்பேண்டா! மஹிந்தவுக்கு ரணில் வாழ்த்து மழை..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்சவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) தொலைபேசி மூலம் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரணில் விக்கிரமசிங்க, தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச , 1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, பின்னர் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.

Related Articles

Latest Articles