2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடியது.
இதன்போதே பாதீட்டை எதிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
