2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என ‘திவயின’ வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இதன்போது அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை அமைச்சு பதவிகள் 30 க்குள் மட்டுப்படுத்தும் பிரிவு நீக்கப்படும். அதன் பின்னர் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய விரும்பிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.