வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று (13) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று (12) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்சவால் பிற்பகல் 2 மணிக்கு பாதீட்டை முன்வைத்து உரையாற்றினார். பிற்பகல் 4.40வரை அவரின் உரை இடம்பெற்றது.
நிதி அமைச்சரின் பட்ஜட் உரையின் பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பட்ஜட் குறித்து பதிலளித்து உரையாற்றுவார்.
இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.