பட்ஜட் கூட்டத்தொடருக்கு பின்னரே அமைச்சரவை மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என தெரியவருகின்றது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பினார். ஆளுங்கட்சி குழுக்கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தாலும் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனால் அமைச்சரவை மாற்றம் உறுதியாகியுள்ளது.

முக்கியமான சில அமைச்சு பதவிகள் மாறவுள்ளதுடன், ஏனைய சிலரின் அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன. .

Related Articles

Latest Articles