முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (08) விசாரணை நடத்தவுள்ளது.
இதற்காக காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட மேலும் பலரின் இரகசிய சொத்துகள் மற்றும் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் பண்டோரா ஆவணம்மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த ஆவணத்தில் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரின் மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்விவகாரமானது இலங்கை அரசியலிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
மேற்படி ஆவணத்திலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் சிவில் அமைப்புகள் சில மேற்படி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கபபட்டுள்ளது.










