பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரின் உரை மாலை 6.45 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக தமதுரையில் பிரதமர் தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது.
சிலவேளை, பதவி விலகும் அறிப்பைக்கூட, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. அத்துடன், இடைக்கால அரசை அமைப்பதற்கான அழைப்பை விடுக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
