பதுளையில் அடை மழை – குடுங்குளிர்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த  3 நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் அடை மழை தொடர்வதுடன் கடும் குளிர் நிலவுகிறது.இதன் காரணமாக வயது முதிர்தோரும், சுவாச நோயுடன் தொடர்புபட்டவர்களும்,சிறுவர்களும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பசறை பிரதேச செயலாளர் பிரிவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. பெருந் தோட்டங்களில் தொழில் புரிபவர்களும்,கட்டுமானப் பணியாளர்களும் ,நாட்கூலித் தொழிலாளர்களும் இதன் காரணமாக பாதிப்படைந்துள்ளனர் உயர்தர பரீட்சைக்காக நகர்புறங்களில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களுக்கு வருகைத் தரும் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதோடு,மாலை 6.00 மணிக்கு முன்னரே வானம் இருள் சூழ்ந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில் மண் சரிவு அபாய பிரதேசங்களில் அனர்த்தங்கள் ஏற்படலாமென மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பசறை நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles