பதுளையில் நீரிழ் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!

பதுளை நகரத்தை அண்மித்த மெதிரிய நீர்நிலையில் நீராடச் சென்ற மாணவர்களுள் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார்.

பதுளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் நிலக்‌ஷன் (வயது 16 ) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் நண்பர்கள் சகிதம் நீராடசென்ற வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜா

Related Articles

Latest Articles