பதுளையில் போதை மாத்திரை விற்ற வைத்தியர் கைது!

பதுளை, முத்தியங்கனை பகுதியில், பதுளை வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது காரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுகின்றார் என பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவலை கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படும் காரை சோதனைக்கு உட்படுத்தியபோது குறித்த காரில் 145 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 44 வயதுடைய பதுளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர் என விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரும், காரும், போதை மாத்திரைகளும் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் (15/02) குறித்த சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தேக நபர் பதுளை மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles