பதுளை நகரில் அமைந்துள்ள கோட்டா கோ கமைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கூறியும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது


ராமு தனராஜா










