பதுளை பஸ் விபத்தில் ஒருவர் பலி – 25 பேர் காயம்!

பதுளையில் இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 25 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பதுளையில் இருந்து கெட்டவத்த நோக்கி பயணித்த இபோச பஸ்ஸே, வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வயோதிப பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles