செந்தில் தொண்டமான் 2.5 மில்லியன் நிதி அன்பளிப்பு
பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதற்குத் தீர்வாக DNA Extractor இயந்திரமொன்றை வைத்தியாலைக்கு பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சிடம் பல தடவை வேண்டுகோள் விடுக்கப்பட்டு இவ்இயந்திரத்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக பதுளை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ, பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.கா.வின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து, , செந்தில் தொண்டமான் தமது சொந்த நிதியில் 2.5 மில்லியன் நிதியை அன்பாளிப்பாக வழங்கியுள்ளார்.
பதுளை மாவட்ட வைத்தியசாலை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலைமை தொடர்பில் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்துடன் இயத்திரன் அவசியம் குறித்து அவர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க DNA Extractor இயந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக செந்தில் தொண்டமான் இவ்வாறு அன்பளிப்பை வழங்கியிருந்தார்.
DNA Extractor இயந்திரம் பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமையின் மூலம் விரைவாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை கண்டறிய முடியும் என்பதுடன், கடந்தகாலங்களில் பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறுவதில் நிலவி வந்த தாமதம் எதிர்காலத்தில் ஏற்படாதென்பதுடன், இனிவரும் காலத்தில் விரைவாக பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொடுத்து தொற்றை கட்டுப்பாட்டுகள் கொண்டுவர முடியும்.
அண்மையில் கொவிட் தொற்றாளர்களை கண்டறியும் PCR இயந்திரத்தை சுகாதார அமைச்சு பெற்றுக் கொடுக்க தாமத்ததால்,செந்தில் தொண்டமான் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் 6.5 மில்லியன் பெறுமதியான பி.சிஆர். (PCR) இயந்திரமொன்றையும் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிட தக்கது.
DNA Extractor இயந்திரத்தை பெற்றுக்கொடுத்தற்காகவும் பதுளை மாவட்ட சுகாதாரத்துறைக்கு கௌரவ செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக வழங்கிவரும் பங்களிப்புகளுக்கும் பதுளை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்தியர்கள், தாதிமார்கள் செந்தில் தொண்டமானுக்கு கடிதம் மூலம் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
– ஊடகப் பிரிவு