பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் 4 மணியளவில் ரிக்டர் அளவில் 7.0 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் மண்டத்தில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தீவில் மக்கள் தொகை குறைவு என்பதால் பாதிப்பு ஏதும் அதிக அளவு உணரப்படவில்லை.

கடலுக்கு அடியில் உள்ள பூமியின் தட்டுக்கள் நகர்ந்ததே இந்த நில நடுக்கத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது. உலகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்று தட்டுக்கள் நகர்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் தட்டுக்கள் லேசானதாக இருப்பதே இதற்கு காரணமாகும். மறுபுறம் இந்தோனேஷியாவின் எல்லை பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் எற்பட்டிருப்பதால் சுனாமி ஏற்படுமோ என்கிற சந்தேகம் வலுத்தது. ஆனால் நல்வாய்ப்பாக அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல கடந்த பிப்ரவரி மாதம் இதே போல 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles