தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
வசந்த முதலிகே போன்றோரை, பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA) கீழ் அடைத்து, வதைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆனால் இந்த சட்டம், 1978ல் இருந்து இலங்கையில் இருக்கின்றது என்பதையும், அது. பிரதானமாக தமிழருக்கு எதிராக 40 வருடங்களாக பயன்படுகிறது என்பதையும், இதற்கு பொருத்தமான பெயர் “அரச பயங்கரவாத சட்டம்” (State Terrorist Act) என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஆகவே தம்பி முதலிகே வெளியே வர வேண்டும்.
அதற்கு முன் அல்லது அதேபோல், இந்த சட்டத்தால் பல ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருக்கும், நம்ம அண்ணன்மார்களும், தம்பிமார்களும் வெளியே வர வேண்டும்.
ஆகவே இந்த சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்..!
இந்த சட்டத்தால் கைதாகி, இன்று நீதிமன்ற தீர்ப்பின்படி சிறைவாசம் அனுபவிப்போர், வழக்குகளை எதிர்கொள்வோர், விசாரணை தடுப்பு கைதிகளாக இருப்போர் என்ற அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்..!










