பருப்பு கிடைக்குமா? விலை உயரும் அறிகுறி!

நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் பருப்பின் விலை தற்போது 250 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#பருப்பு #விலைஅதிகரிப்பு

Paid Ad
Previous articleவெளிநாடு சென்ற துமிந்த சில்வா!
Next articleதடுப்பூசி ஏற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம்! இளைஞர், யுவதிகளுக்கான விசேட கோரிக்கை