‘பல்டி’ அடித்த 1,137 உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தது ஐ.தே.க.

ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இதர கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஆயிரத்து 137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின், கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில், 340 உள்ளாட்சிமன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவான, உறுப்பினர்களின் உறுப்புரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் குறித்த உறுப்பினர்கள். வேறு கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இவர்கள் ஏற்கனவே ஏனைய கட்சிகளின் ஊடாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்தே, அவர்களது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 300 பேர் கொண்ட குழு மன்னிப்பு கேட்க அவகாசம் கேட்ட போதிலும், கட்சியின் செயற்குழு அதை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீக்க முடிவு செய்தது.

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1137 புதிய உறுப்பினர்களை கட்சி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles