பல கிசுகிசு தளங்கள் மீது இலங்கை கிரிக்கெட் சபை வழக்கு

SLC தலைவர் ஷம்மி சில்வாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெண்களை வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் சென்று யாருடைய பணத்தை அனுபவித்தார் ஷம்மி சில்வா?’ என்ற தலைப்பில் கடந்த மாதம் பல கிசுகிசு தளங்களில் செய்தி வெளியானது.

அதன்படி, இந்த பொய்யான மற்றும் இழிவான அறிக்கையின் மூலம் இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்புகளுக்கு நஷ்டஈடாக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ஐநூறு மில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரி SLC கோரிக்கை கடிதங்களை (LOD) அனுப்பியுள்ளது.

Related Articles

Latest Articles