பழைய விலைக்கே பொருட்கள் விற்பனை – நுகர்வோர் விசனம்

வீட்டு பாவனைக்கான லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விநியோகத்தர்கள் விலை குறைப்பு செய்யாமல் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  அத்தியாவசிய  பொருட்களின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டாலும் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பொருட்களின் விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.இது குறித்து பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விலை அதிகரித்தால் உடனே விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் வியாபாரிகள் விலை குறைப்பை பொருட்படுத்தாமல் பழைய விலைக்கே வாங்கியதாகவும் தெரிவித்து தட்டிகழிப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கினறனர்.

Related Articles

Latest Articles