நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும், அவரின் செயலாளர் ஆட்டிகலவும் இன்று டில்லி செல்லவிருந்தனர். எனினும், இப்பணம் பிற்போடப்பட்டுள்ளது என நேற்று மாலை திடீரென அறிவிப்பு வெளியானது.
இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான உடன்படிக்கையை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே நிதி அமைச்சர் பஸில் அங்கு செல்லவிருந்தார்.