பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்றவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை செய்த நபரொருவர் மஹியங்கனை நகரில் நேற்று (24) செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

44 வயதுடைய சந்தேக நபர் மஹியங்கனை, பதியத்தலாவ வீதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை நகரில் இருவெட்டு வியாபாரம் என்ற போர்வையில் சந்தேகநபர் இந்த சட்டவிரோத செயலை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வியாபார நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கஞ்சா கலந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.டபிள்யூ.எஸ்.பி.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப டபிள்யூ.டபிள்யூ.சி.ஆர் விஜேரத்ன, ஊழலுக்கு எதிரான பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி ஜயசேகர (66024), தாரக (81655) மற்றும் பொகோ பிரசன்ன (451) ஆகிய உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles