பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவியொருவர் இன்று பகல் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல நகர பிரபல தமிழ் பாடசாலையில் கற்கும் குறித்த மாணவி, பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
( நடராஜா மலர்வேந்தன் )










