பாட்டு சரியில்லை! மண்டபத்துக்குள் வர மறுத்த மணப்பெண்! (Video)

திருமண மண்டபத்துக்குள் தான் முதன்முதலாக நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கவிடுவதற்கு ஏற்கனவே தயார்படுத்திக்கொடுத்த பாட்டை தக்க தருணத்தில் ஒலிக்க விடவில்லை என்பதற்காக மண்டபத்துக்குள் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

அலங்காரத்தோடு வந்து நின்று அடம்படித்த இந்த மணப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று, கூட நின்றவர்கள் ஓடிப்போய் குறிப்பிட்ட பாட்டை இசைக்கவிட்ட பிறகுதான் அம்மணியின் முகத்தில் சிரிப்பு வந்தது. மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மூச்சு வந்தது.

Related Articles

Latest Articles