பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்துமாறு பணிப்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுவினரையும் முற்றாகக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸாருக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இன்று முற்பகல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியைக் கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்துடன் செயற்படுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles