இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா பாடிய “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் ‘சூப்பர் ஹிட்’டாகியுள்ளது. இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் அடிக்கடி செவிமடுக்கும் பாடலாகவும் மாறியுள்ளது.
அதேவேளை குறித்த பாடல்மூலம் இலங்கையின் நாமமும் இன்று சர்வதேச மட்டத்தில் உச்சரிக்கப்படுகின்றது. சிங்கள சினிமாத்துறையில் புதியதொரு புரட்சிக்கான அடித்தளத்தையும் இட்டுள்ளது.
இதனால் யொஹானிக்கு அரச விருது வழங்குவதற்கான ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடலானது அதிஉயர் சபையான இலங்கை பாராளுமன்றத்திலும் இன்று ஒலிபரப்பானது.
” யொஹானி என்ற இசைக்கலைஞரை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இதற்காக அவர் பாட்டி பாடலை இந்த சபையில் ஒலிபரப்புகின்றேன்.” எனக் குறிப்பிட்டு, தனது தொலைபேசிமூலம் பாடலை போட்டார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார. பாடலும் சிறிது நேரம் ஒலித்தது.










