இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர லங்கா சபாகய, டலஸ் அணி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்டவை எதிராக வாக்களிக்கவுள்ளன.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
