” இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்கான போராட்டம் நாளை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும். நாம் கொழும்பு வருவது உறுதி.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
” இந்த அரசு அஞ்சுவிட்டது. அதனால்தான் எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது. அடக்குமுறையைக் கையாள்கின்றது. நாம் தயங்கமாட்டோம். எமது போராட்டம் நடைபெறும்.” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ஜனாதிபதி தெரிவாகி நாளையுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவர் தோல்வியடைந்துள்ளார். இதையும் வெளிப்படுத்துவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்