பிரதேச செயலகங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு

50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய  பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் வவுனியா, கண்டி, மாத்தறை, குருநாகல் பிரதேச காரியாலயங்களில் மூன்று நாட்களுக்குள் விரைவு சேவையின் ஊடாக கடவுச்சூட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தூதரகங்களுக்கு சென்று கைவிரல் அடையாளத்தை  உறுதிப்படுத்தி, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்காக மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் 2 இலட்சம் டொலர் நிதியை வைப்பிலிடவேண்டும் எனவும் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

குறித்த வைப்பீட்டுத் தொகை இரண்டு வருடங்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என கூறிய அவர், பின்னர் ஒரு இலட்சம் டொலர்கள் மீள வழங்கப்படும் எனவும் கூறினார்.

அவ்வாறு செய்பவர்களுக்கு 10 வருட விசா வழங்கப்படும் என்றும் இது நாட்டிற்கு ஒரு முதலீடாக அமையும் எனவும் னரல் ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.

அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles