பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது.

தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது.

கடந்த நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான Omicron தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. B.1.640.2 என்று பெயரிடப்பட்டு  IHU என அழைக்கப்படும் அந்த வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸின் Marseille நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா Omicron வைரஸை விட அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Omicron-ஐ விட இது 46-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Video thumbnail
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்ட ரஞ்சன்
01:37
Video thumbnail
கேஸ் விபத்துக்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம்
01:38
Video thumbnail
“எதிர்வரும் நாட்களில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில்”
01:41
Video thumbnail
“தனது இரு குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை கைது”
01:42
Video thumbnail
உலக சாதனையுடன் அசத்தும் அட்டன், கொட்டகலை சிறுவன்
04:02
Video thumbnail
அதிவேகமும், அவசரமும் உயிரைப் பறிக்கும்!
01:11
Video thumbnail
அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் பிள்ளைகளும், ஆசிரியர்களும்!
04:21
Video thumbnail
பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
03:11
Video thumbnail
“எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்”
01:36
Video thumbnail
தற்போதைய பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்பல்ல - வஜிர அபேவர்தன
00:32

Related Articles

Latest Articles