பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர்களான மூவரும் சிறைச்சாலையில் இருந்து மெய்நிகர் முறையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லடியில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது, காத்தான்குடியில் ஒரு இருவர் கொல்லப்பட்டது, மற்றும் வவுணதீவில் ஒரு தொழிலதிபர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக – பிள்ளையான் மற்றும் மூவர், லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் ஒருவர் என நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த ஜூன் 17 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிள்ளையன் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறைக்கு தகவல் அளிக்கும் இரண்டு பேர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2025 நவம்பரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் நான்காவது சந்தேக நபருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles