கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணொருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற வேனொன்றே வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வேனில் எழுவர் பயணித்துள்ளனர். இரண்டரை வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த ஐவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.