புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி ஆரம்பம்!

புதியதொரு அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணி ஆரம்பமாகிவிட்டது.  ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தற்காலிக ஏற்பாடு மாத்திரமே, முழுமையானதொரு அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் – என்று சட்டத்துறை பேராசிரியரும், அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார். அவரிடம் சுயாதீனம் இருக்கவில்லை. தேர்தலை நடத்தவேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். இவ்வாறு 19 இல் பல குறைப்பாடுகள் உள்ளன. அச்சட்டம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இந்த நாட்டில் 42 வருடங்களாக அமுலில் உள்ளது. அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப – சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 9 பேரடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அக்குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 6 மாதங்களுக்குள் வரைவு நகலை வழங்குவதாக குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

எனவே, 20 என்பது தற்காலிக ஏற்பாடு, அதனை ஒத்திவைக்கமுடியாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான ஆரம்பமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். முழுமையானதொரு அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles