புதிய ஆளுநர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை

“மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள்.”

– இவ்வாறு இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மூன்று புதிய ஆளுநர்களிடமும் நேரில் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் மூன்று புதிய ஆளுநர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆளுநர்களுக்கு எதிராக மக்கள் தரப்பிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரக்கூடாது என்பதுதான் எனது விருப்பம். ஆளுநர்களை நியமிப்பதும் பதவி நீக்குவதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை முன்னாள் ஆளுநர்கள் மறந்து செயற்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles