” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடன் மீளப்பெறவும்” – ஐ.ம.ச. வலியுறுத்து

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை எனவும், தனக்கு விசுவாசமான சட்டத்தரணிகள் ஊடாகவே அரசு இதனை செய்துள்ளது எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக தமது அணி நீதிமன்றம் செல்லும் எனவும் கிரியல்ல குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles