புதிய வகை நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்கும்படி மத்திய வங்கி எச்சரிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணய வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை வழங்குவோம் என்று கூறி சில மோசடிகள் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

மோசடிக்காரர்கள் சில சமயங்களில் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் சமர்ப்பிப்பார்கள் என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சில சந்தர்ப்பங்களில், மேற்படி பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்காக எனக்கூறி, தனிநபர் அடையாள இலக்கங்கள், அட்டை சரிபார்த்தல் இலக்கம், அதேநேரக் கடவுச்சொல், பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தொலைபேசி மற்றும் இணைய வங்கியியலின் அதேநேரக் கடவுச்சொல் போன்றன உள்ளடங்கலான கணக்கு விபரங்களை வாடிக்கையளர்களிடமிருந்து மோசடியாளர்கள் கோருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேற்படி விபரங்களை வழங்குவது பாரிய நிதி ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இத்தகைய மோசடியான அறிவித்தல்களையும் நடைமுறைகளையும் கருத்திற்கொள்ள வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களைக் கோரியுள்ளதோடு, இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

“எந்தவொரு இரகசியத் தரவுகளையும் குறிப்பாக, கணக்குப் பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தனிநபர் அடையாள இலக்கம், அதேநேரக் கடவுச்சொல் மற்றும் கணக்கு சரிபார்த்தலுடன் தொடர்புடைய தரவுகள் போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் மத்திய வங்கி எல்லோருக்கும் அறிவிக்கின்றது.

மேலும், குறுந்தகவல் சேவை எச்சரிக்கை, அதேநேர அறிவிப்புச் சேவைகள் முதலியவற்றைத் தங்களது வங்கிகளிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதோடு, இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கணக்குகளைப் பாவித்து ஏதேனும் மோசடிகள் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக அறியலாம் என்பதையும் தெரிவிக்கின்றது.”

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles