புனர்வாழ்வு செயலக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள், வன்முறைமிக்க தீவிரவாதக் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு ஏற்புடைய நபர்களுக்கான சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல், பின்னரான பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கருமங்களை ஆற்றுவதற்காக புனர்வாழ்வு செயலகமொன்றை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021.04.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










