புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு! கலஹாவில் சோகம்!!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டத்தில் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த காண்டீபன் திவான் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலைக்கு சென்று, பிரத்தியேக வகுப்பையும் முடித்துக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பும்போது, சிறியதொரு பாலத்தை கடக்க முற்படுகையிலேயே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் நேற்று மாலை முதல் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் லிட்டில்வெளி பகுதியில் இருந்து சுமார் 5 கிமி தொலைவில் ஓடையில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனுக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர்.

Related Articles

Latest Articles